தமிழ்த்துறை
இமயம் தொட்ட இதயாவின் இனிய தமிழ்த்துறை :
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.” (பாரதியார் கவிதை)
ஒருவரின் அடையாளம் அவரது தாய்மொழி. ஓவ்வொரு தமிழரின் தாய்மொழி வளர்ச்சியை பாதுகாப்பதற்கும் – பராமரிப்பதற்கும் – கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் – தமிழ்த்துறை 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு முதுகலை பட்ட வகுப்பும் (MA)> 2011-ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) வகுப்பும் தொடங்கப்பட்டது. ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் 2020 வரை 60 மாணவியர்கள் ஆய்வு மேற்கொண்டு பயன்பெற்றுள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் முனைவர் (Ph.D) பட்ட ஆய்வுப் படிப்புகள் தொடங்கப்பட்டு – தற்போது முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் 8 மாணவியர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாணவியரின் மொழிப்புலமையை வளர்ப்பதற்காகவும் – தனித்திறனை இனம் காணும் வகையிலும் – ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் “வெள்ளிவட்டம்” என்ற நிகழ்வு நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாணவியர்களுக்கு கட்டுரைப் பயிற்சி – கட்டுரை வாசிப்பு கலைப்பயிற்சி (கூத்துப்பட்டறை) – போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறும் வகையில் தமிழ் – மன்றத்தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
இலக்கு :
“ஓங்கு தமிழ்ப் புகழ் உலகெங்கும் ஓங்கிட” கல்வியின் சிகரமாம் இதயா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தொடங்கப்பட்ட நாள் முதல் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி, உயராய்வு மையமாகச் செவ்வனே செயல்பட்டு வருகின்றது. இத்துறையின் முதன்மை நோக்கம் “பெண்கல்வியினை வளர்த்து பெண்ணினத்தின்; மாண்பினை உயர்த்துவது” ஆகும்.
நோக்கம் :
“புத்தகம் பல கொண்டு புதுமைகள் பல செய்து வித்தாக்கம் பல கண்டு விருட்சங்களை உருவாக்கும் அறிவுக்கூடம்.”
தமிழ்த்துறை மாணவியரின் சிந்தனைத் திறனை வளர்ப்பதை இலக்காகக் கொண்டு, எண்ணுக்கு எழுத்தாய் கண்ணுக்கு கருத்தாய் இருந்து – காரிகைகளின் கல்வித் தாகத்தைத் தணிக்கும் அறிவுக் கிணறாய் விளங்கி – இலக்கிய ஆர்வத்தை வளர்த்து – கலை உலகைப் படைக்கவும் – பாதைகள் பல வகுத்து – வெற்றித் தடத்தைப் பதிக்கவும் – முயற்சிகளை எடுத்து வருவதேயாகும்.
பயன்:
“அறிவில் சிறந்து ஆக்கத்தில் திளைக்க விந்தைமிகு கல்விக் கற்று வியத்தகு சாதனைப் படைப்போம்.”
எங்கள் துறையில் பராசிரியர்கள் பாட வகுப்புகள் மட்டுமின்றி கருத்தரங்குகள் – பயிற்சிப் பட்டறைகள் – போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் – தமிழ்த்துறை நல் ஆலோசனைகளை சேவைகளாக வழங்கி வருவதோடு மட்டுமின்றி, சமூகத்தின் நலனுக்காக பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பேராசிரியப் பெருமக்கள் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரைகளை வழங்கி வருகின்றனர். இதுவரை இளநிலையில் ஒரு தங்கப் பதக்கத்தையும் – இளநிலை மற்றும் முதுகலை பட்டத்தில் மொத்தம் 35 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளோம்.
எதிர்காலத் திட்டம் :
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.” (குறள் - 398)
மாணவியர்களின் மொழித்தரத்தை உயர்த்தும் வகையில் ஒரு மொழி ஆய்வகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். தேசிய தகுதித் தேர்வுகள் (NET) மாநிலத் தகுதித் தேர்வுகள் (SET) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போன்ற போட்டித் தேர்வுகளில் மாணவிகள் வெற்றியடைய பயிற்சி அளித்து ஊக்கப்படுத்துகின்றோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் துறைசார் பத்திரிக்கைகள் வெளியிட முனைந்துள்ளோம்.
செயல்பாடுகள்